» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடியது : வேலைக்கு செல்வோர் அவதி

வியாழன் 2, ஜூலை 2020 11:56:57 AM (IST)சுரண்டையில் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடியது. மேலும் வேலைக்கு செல்வோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  அதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது இதனால் மாவட்டத்திற்குள்ளான போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டதால்  சுரண்டைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. 

ஆகவே எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுரண்டைபேருந்து நிலையம், மார்க்கெட், மெயின் ரோட்டில் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டன. இதனால் கடைகள் வழக்கம் போல திறந்திருந்தாலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. பஸ்கள் இயங்காததால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory