» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகிரி அருகே மது விற்றவர் கைது

வியாழன் 2, ஜூலை 2020 5:41:33 PM (IST)

சிவகிரி அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற நபரை போலீசார் விசாரித்த போது, அந்த நபர் தேவிபட்டணம், ராமசாமியாபுரம் நடுவூரைச் சேர்ந்த பரமன் மகன் பரமேஸ்வரன் ( 33) என்றும், அவர் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து பரமேஸ்வரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory