» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 3 மணி நேரம் மட்டும் இயங்கிய டீக்கடைகள்

வியாழன் 2, ஜூலை 2020 6:22:24 PM (IST)

நெல்லை மாநகர் பகுதியில் 3 மணி நேரம் மட்டுமே டீக்கடைகள் இயங்கின.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கும், தடை உத்தரவு அமலில் உள்ளது. அப்போது பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் மட்டும் நேரத்தில் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. டீக்கடைகள், ஹோட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் ஹோட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. டீக்கடைகளில் டீ விற்பனை செய்யக்கூடாது பார்சல் மட்டும் வழங்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதையடுத்து டீக்கடைகளில் டீ விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டீக்கடைகள் மக்கள் அதிக அளவில் கூட்டம் கூடுவதாலும், சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படாததாலும் தான் கரோனா தொற்று அதிகரிக்கிறது என டீக்கடைகளில் மக்கள் கூடுவதை தடுக்க காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே டீ விற்பனை செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே இயங்கின. நெல்லை மாநகராட்சி பகுதியில் காலை 6 மணிக்கு டீக்கடைகள் திறக்கப்பட்டு, 9 மணிக்கு அடைக்கப்பட்டன. பெரிய ஹோட்டல்களிலும் டீ விற்பனை 9 மணி வரை மட்டுமே நடந்தன. இந்த கடைகளில் குறைந்த அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.நெல்லை மாநகர பகுதியில் 300-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் காலை 6 மணி முதல் 9 மணி மட்டுமே டீ விற்பனை செய்ய அனுமதி என்பதால் 100 கடைகள் மட்டுமே இந்த 3 மணி நேரம் மட்டும் இயங்கின.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory