» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியரை அருகே ஆரியங்காவில் திடீர் நீரூற்று

வெள்ளி 3, ஜூலை 2020 10:46:15 AM (IST)

தென்காசி புளியரை அருகே கேரளா மாநிலம் ஆரியங்காவில் திடீர் நீரூற்று ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் சரியான அளவில் மழை பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.  அணையின் நீர் மட்டம் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் விவசாய பணிகள் தொடங்கபடவில்லை. 

கேரள மாநிலத்தில் பருவமழை அதிகளவில் பெய்யும்போது திடீர் நீரூற்றுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆங்காங்கே ஏற்படுவது வழக்கமாம். ஆனால் இந்த ஆண்டு சரியான அளவில் மழை பெய்யவில்லை என்ற நிலையில் ஆரியங்காவு அருகே உள்ள சொர்ணகிரி எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் 2 நாட்களுக்கு முன் திடீரென நீரூற்று ஏற்பட்டுள்ளது. 

இதனால் அந்த இடத்தில் 15 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி பள்ளத்தை நோக்கி சென்றுள்ளது. மழை சரியாக இல்லாததால் ஊற்றில் தண்ணீர் குறைந்து தற்போது கசிவு மட்டும் காணப்படுகிறதாம். இதேபோல் வெஞ்சர் எஸ்டேட் தகபுறா பகுதியிலும் விவசாய நிலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மழை இல்லாததால் அங்கும் தண்ணீர் ஊற்று இல்லாமல் வெறும் பள்ளம் மட்டுமே காணப்படுகிறது. 

இதை அடுத்து அந்தப் பகுதியை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது அதிக அளவில் மழை பெய்தால் மட்டுமே இவ்வாறு திடீர் பள்ளம் ஏற்பட்டு நீர் ஊற்று ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சரியான மழை இல்லாததால் திடீர் பள்ளம் ஏற்பட்ட நிலையில் தண்ணீர் கசிவு இல்லை என்று தெரிவிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory