» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனாவுக்கு மெடிக்கல் உரிமையாளர் பரிதாப பலி

வெள்ளி 3, ஜூலை 2020 11:24:47 AM (IST)

நெல்லை தனியார் மருத்துவமனையில் தங்கி கொரோனா வைரஸ் தொற்று தாக்கி சிகிச்சைபெற்று வந்த கடையநல்லூரைச் சேர்ந்த மெடிக்கல் உரிமையாளர் பலியானார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர்  நகராட்சி  பகுதிகளில் நகராட்சி  நிர்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.ஆனால் கடந்த வாரம் அட்டக்குளம் தெருவில் வசிக்கும் இருவருக்கு வைரஸ் தொற்று பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன் சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சி  நிர்வாகம் அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றதுடன் வசிக்கும் வீதிகள் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டு துரித நடவடிக்கைககளை எடுத்து வந்தனர்.

பின்னர் நேற்று நகராட்சி மணிகூண்டு அருகேயுள்ள பிரபல மெடிக்கல் அதிபருக்கு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அவர் வசித்து வந்த தெரு மற்றும் மெடிக்கல் ஷாப் அனைத்தையும் நகராட்சி  நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரதுறையினர் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தி  கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சைபெற்று வந்தவர் பலியானதாக தகவல் தெரியவந்தது.இதனால் கடையநல்லூர்  நகரம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் பொதுமக்கள் சமூகவிலகலை கடைபிடிக்கவும் முககவசம் இல்லாமல் வெளியே சுற்றிதிரிபவர்கள் மீது அபராததொகை வசூலிக்கவும் நகராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது..கடையநல்லூரில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானதையடுத்து பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory