» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமணம் செய்து கொள்வதாக ரூ. 5 லட்சம் மோசடி : பெண்ணுக்கு கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

வெள்ளி 3, ஜூலை 2020 12:37:22 PM (IST)

தென்காசியில் திருமணம் செய்து கொள்வதாக ரூ5 லட்சம் மோசடி செய்ததால் அதனை திருப்பி கேட்ட பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்தவர் வாசு. இவரது மகள் மஞ்சுளா (41). இவருக்கு திருமணமாகி கடந்த 11 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். இதையடுத்து மேலகரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் சுப்பையா என்பவருக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மஞ்சுளாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனராம். அப்போது செலவுக்காக மஞ்சுளாவிடம் கணேஷ் சுப்பையா 5 லட்சம் ரூபாய் வரை வாங்கினாராம். இதனிடையே திடீரென மஞ்சுளாவை திருமணம் செய்ய கணேஷ் சுப்பையா மறுத்து விட்டாராம். 

இதனால் மஞ்சுளா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது பாளை மகாராஜா நகரில் உள்ள சகோதரி வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறினாராம். அங்கு சென்ற மஞ்சுளாவை கணேஷ் சுப்பையா அவரது சகோதரி கணவர் அருணா சண்முகநாதன் மற்றும் சகோதரி சிவஞானம் ஆகியோர் சேர்ந்து கீழே தள்ளி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இச்சம்பவம் குறித்து மஞ்சுளா பாளை அரசு மருத்துவமனை போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory