» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் : உறவினர்கள் சாலை மறியல்

வெள்ளி 3, ஜூலை 2020 12:58:30 PM (IST)

செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இறந்தவர்களது உறவினர்கள் பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்வதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் இசக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (20) ஆகிய 4 பேர் வந்துள்ளனர். முதலில் கழிவு நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு, இசக்கிராஜாவும் பாண்டியும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால், பாலாவும், தினேஷும் இறங்கியுள்ளனர். பின்னர் அவர்களும் வெளியே வரவில்லை. 

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் உள்ளே இறங்கி பார்த்தபோது போது விஷவாயு தாக்கி 4பேரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 4பேரின் உடல்களும் வெளியே மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை பாளை அரசு மருத்துவ மனையில் நடை பெற்று வருகிறது . 

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை , இறந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவினை அரசு ஏற்பது , உரிய இழப்பீடு வழங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பழங்குடியினர் வாழ்வுரிமை கட்சி, வன வேங்கைகள் கட்சி, குறிஞ்சியர் சமூக நீதி பேரவையினர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory