» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாற்றுத்திறனாளி நிவாரண தொகை வழங்க தாமதம் : விரைந்து வழங்கிட கோரிக்கை

வெள்ளி 3, ஜூலை 2020 1:19:06 PM (IST)

சுரண்டை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம்  ஏற்படுவதாகவும் அதை விரைந்து வழங்கிட கோரிக்கை எழுந்துள்ளது 

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில்மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே சென்று வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். 

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்தும் அதன் நகலினை தங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் வீடுகளுக்கு வரும்போது சமர்பித்து அரசின் நிவாரணத்தொகை ரூ.1000-ஐ பெற்றுக் கொள்ளலாம். விநியோகப்படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்கவேண்டும். 

கிராம நிர்வாக அலுவலர்/நிவாரணத்தொகை வழங்கும் அலுவலர் நிவாரணத் தொகை வழங்கிய விவரத்தினை தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவு புத்தகத்தில் உதவிகள் வழங்கும் பக்கத்தில் கோவிட்-19 நிவாரணத்தொகை ரூ. 1000வழங்கப்பட்டது. என்ற முத்திரையிட்டு, வழங்கும் அலுவலர் கையொப்பமிடுவார்.நிவாரணத்தொகை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும்.இந்த நிவாரண உதவித்தொகை 29.06.2020 நாளிலிருந்து 03.07.2020 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரில் வந்துவழங்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரம் அடுத்து உள்ள வீரசிகாமணி கிராமத்தில் கோவிட்-19 நிவாரணத்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் மாற்றுத்திறனாளிகள் கேட்டபோது சில மாற்றுத் திறனாளிகளின் பெயர் மற்றும் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் மட்டுமே வந்துள்ளதாகவும், பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டும் தற்போது நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் அடங்கிய மற்றொரு பட்டியல் வர இருப்பதாகவும், அதன் பின்பு ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்டியல் வருவதற்கு தாமதமாகி வருவதால் மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிட்-19 நிவாரணத்தொகை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையை எவ்வித காரணத்தை கூறியும் காலம் தாழ்த்தாமல் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் விரைந்து வழங்க தென்காசி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேணடும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

02.07.2020 வரை ஏற்கனவே வந்துள்ள பட்டியலில் பெயர் இடம்பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory