» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவலருக்கு கொரோனா காவல் நிலையம் மூடல்

வெள்ளி 3, ஜூலை 2020 1:34:58 PM (IST)



குற்றாலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ஒருவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இதனையடுத்து அவர் வசிக்கின்ற பகுதி தனிமைப் படுத்தப் பட்டது.  மேலும் குற்றாலம் காவல் நிலையம் மூடப்பட்டது. 

காவல் நிலையம் பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கும் பணியில் குற்றாலம் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.  மேலும் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.காவலருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது  குற்றாலம் காவல்துறை மற்றும் அப் பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory