» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

வெள்ளி 3, ஜூலை 2020 5:29:08 PM (IST)

சிவகிரி அருகே மாடிப்படியி;ல் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிப்;பட்டணம் கவுண்டர் மேட்டுத் தெருவில் வசித்தவர் முருகன் (43). எலக்ட்ரீசியன். இவர் கடந்த மாதம் 26ம் தேதி அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். படுகாயமடைந்த முருகன் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

முருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் முருகன் பரிதாபமாக இறந்தார்.இச்சம்பவம் குறித்து முருகன் மனைவி  ரஞ்சிதாகுமாரி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த முருகனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory