» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 3, ஜூலை 2020 6:04:00 PM (IST)

சிவகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பயணப்படி, சரண்டர், பழைய ஓய்வூதியம், கொரோனா நோய் தடுப்பு பணி சிறப்பு ஊதியம் மற்றும் அரசு ஊழியர் கொரோனா நோயின் காரணமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கல், வாரிசு வேலை உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரி வட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் அனைத்து அரசு சார்ந்த ஊழியர்கள் சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு வட்ட செயலாளர் மாடசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சுகாதாரத்துறை ராஜ் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் துணை தாசில்தார்கள் கருப்பசாமி, சரவணன், சாலைப்பணியாளர்கள், கருவூலத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை,, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory