» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் முழு ஊரடங்கு: கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது
ஞாயிறு 5, ஜூலை 2020 12:41:24 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும், கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்திட ஜூலை 05, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிமை எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் பிரதானச் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. திருநெல்வேலி தூத்துக்குடி- திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வித வாகனங்களும் இயக்கப்படாமல் காட்சியளித்தன. மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காய்கனி சந்தைகள், கடைகள், உணவகங்கள், சந்தைகள், வாடகை காா் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. மக்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினா். மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்தன. முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா
சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)

கனமழையால் பயிர் சேத பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 3:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்
சனி 23, ஜனவரி 2021 3:41:42 PM (IST)

செங்கோட்டை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 10:11:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 23, ஜனவரி 2021 8:56:20 AM (IST)

விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வெள்ளி 22, ஜனவரி 2021 9:14:57 AM (IST)