» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முழு ஊரடங்கால் ஸ்தம்பித்தது தென்காசி மாவட்டம்

ஞாயிறு 5, ஜூலை 2020 1:54:35 PM (IST)


தமிழக அரசு ஞாயிற்று கிழமைகளில் அறிவித்துள்ள முழு ஊரடங்கால் தென்காசி மாவட்டம் ஸ்தம்பித்தது

தமிழகம் முழுவதும் கொரோனா‌ பரவலை கட்டுப்படுத்த நூறு நாட்களை தாண்டி அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன் செயல்படும் ஊரடங்கில் ஜுலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமை எவ்வித தளர்வுமின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்க படுகிறது.இந்நிலையில் ‌‌‌‌‌‌இன்று‌ முழு ஊரடங்கை முன்னிட்டு ‌‌‌தென்காசி மாவட்டத்தில் தென்காசி, வாசுதேவநல்லுார், கடையநல்லுார்,செங்கோட்டை, ஆலங்குளம், சிவகிரி மற்றும் சுரண்டையில் காலை முதலே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

காய்கறி, மளிகை, டீ, ஹோட்டல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பால், மருத்துவமனை, மெடிக்கல் மட்டும் திறந்திருந்தன. ஆட்டோ, உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் இயங்கவில்லை. மருத்துவமனைகளில் பணிபுரிவோர் மட்டுமே ‌‌‌‌‌‌‌‌‌‌‌இரு‌ சக்கர வாகனத்தில் சென்றனர். ஊரடங்கை முன்னிட்டு சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி எஸ்ஐ ஜெயராஜ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory