» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழாய் பதிக்க ரோட்டை தோண்டியதால் சாலை விபத்துகள் : சீரமைக்க காங்கிரஸ் கோரிக்கை

திங்கள் 6, ஜூலை 2020 10:20:43 AM (IST)

சுரண்டையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய ரோடுகளை உடனே சீரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

சுரணடை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டிலுள்ள அனைத்து சாலைகளிலும் புதிதாக இணைக்கப்பட்ட குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிமெண்டால் மூடப்படாமல் மேடு பள்ளமாக உள்ளது. உடனே அனைத்து பகுதிகளிலும் செப்பனிட வேண்டும் என தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்

சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் ரோட்டின் மேல் புரம் சிவகுருநாதபுரம், பழைய மார்க்கெட், இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, மகாலட்சுமி மருத்துவமனை, ஐஓபி ஏடிஎம்,  ரூம் பேரூராட்சி பயணியர் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மற்றும் ஷாப்பிங் காம்பளக்ஸ் காய்கனி கடைகளுக்கு சென்று வரும் ரோட்டில் பல இடங்களில் குழி நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வருகின்றனர் 2 சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து எழும் நிலையில் உள்ளது. இதே போன்று பல ரோடுகள் உடைந்து உள்ளன. 

ஆகவே தென்வடல் சாலையை செப்பனிட்டு புதிய சிமெண்ட் சாலை அமைத்து தருவதுடன் பிற ரோடுகளில் உடைந்த பகுதிகளின் ஓரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்க பொது நலன் கருதி அன்புடன் கோரிக்கை விடுக்கிறேன் என காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம் கோரிக்கை விடுத்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory