» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வருவாய்த்துறையினருக்கு கொரோனா பரிசோதனை : தென்காசி ஆட்சியருக்கு கோரிக்கை

திங்கள் 6, ஜூலை 2020 11:11:05 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம கோரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட மையம் சார்பில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தீவிரமாகி இருக்கக் கூடிய சூழ்நிலையில் வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முழுமையான 100 சதவிகிதம் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும், அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட உயர் அலுவலகங்களுக்கு வருமாறு பணிக்கப்படுகிறார்கள்.

பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் ஒரு சில பேருந்துகளை அரசுப்பணிக்கு செல்பவர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஏராளமான ஊழியர்கள் சமூக இடைவெளியின்றி பயணிப்பதால் ஊழியர்கள் மத்தியில் நோய் தொற்று அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நோய் தொற்று உயர் அலுவலர்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. - இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி இன்னும் பிற மாவட்டங்களில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வரப்பெற்றுள்ளது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தார், வீரகேரளம்புதூர் தாசில்தார், கல்லுாரணி வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, அலுவலகத்திற்கு வருகை தரும் ஊழியர்களுக்கான பாதுகாப்பான பயணத்தினை நிர்வாகம் உறுதி செய்திடவும், ஆய்வு கூட்டங்களை கைவிடவும், களப்பணியில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பணி முன்னேற்ற ஆய்வினை கைவிடவும்,வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கு அழைப்பதையும் நோய் தொற்று தீவிரமாகும் காலத்தில் பணிகளை முடிக்க நிர்பந்திப்பதை தவிர்க்க உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடவும், அலுவலகத்தை 50 சதவிகித பணியாளர்களுடன் இயக்கிய உரிய அறிவுரைகளை அனைத்து அலுவலக தலைமைக்கும் வழங்கிடவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

வருவாய்த்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், களப்பணியில் உள்ளவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்திடவும், கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் தடுப்பு மருந்துகளை வழங்கிடவும், அனைத்து அலுவலகங்களிலும் தினந்தோறும் தெர்மல் ஸ்கேனர் வைத்து கட்டாய பரிசோதனை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு தென்காசி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட மையம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory