» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வியாபாரி மர்மச்சாவு போலீஸ் விசாரணை

திங்கள் 6, ஜூலை 2020 11:36:13 AM (IST)

கடையநல்லூர் அருகே பால்வியாபாரி சந்தேக மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (55) பால்வியாபாரி. நேற்றிரவு கிருஷ்ணாபுரத்தை அடுத்த கல்லகநாடியம்மன் கோயில் அருகே சீட்டு விளையாட புளியங்குடியைச் சேர்ந்த நபருடன் பைக்கில்  சென்றுள்ளார்.அந்த இடத்தில் திடீரென செல்லத்துரைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால், அவரை உடனடியாக அவருடன் இருந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக கடையநல்லூர்  அரசுமருத்துவமனைக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளனர்.பைக்கில் செல்லும்போதே செல்லத்துரை உயிரிழந்தார்.

இதுகுறித்து செல்லத்துரையின் மகன் வெள்ளப்பாண்டி சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.செல்லத்துரையின் உடலை பிரேதபரிசோதனை செய்தபிறகு மருத்துவர்களின் சான்றுகள் கிடைத்த பின்னர் தான் செல்லத்துரை எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்லத்துரைக்கு மாடத்தி என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory