» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேரூராட்சி அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா

திங்கள் 6, ஜூலை 2020 12:05:36 PM (IST)

தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் மேலும் இரு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றுபவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேரூராட்சியில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இவ்விருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். 

இதனையடுத்து சிவகிரி பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவர்கள் வசிக்கின்ற பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பேரூராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory