» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி 2 பேர் படுகாயம்
திங்கள் 6, ஜூலை 2020 1:15:36 PM (IST)
தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வெய்காலிபட்டி கீழ தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மணிகண்டன் (24). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து அதில் டிரைவராகவும் இருந்துள்ளார்.இவர் பூவனூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திரவியநகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோவை திருப்பும்போது, ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன் மற்றும் இரு பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா
சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)

கனமழையால் பயிர் சேத பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 3:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்
சனி 23, ஜனவரி 2021 3:41:42 PM (IST)

செங்கோட்டை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 10:11:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 23, ஜனவரி 2021 8:56:20 AM (IST)

விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வெள்ளி 22, ஜனவரி 2021 9:14:57 AM (IST)
