» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக்கிற்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது

திங்கள் 6, ஜூலை 2020 7:24:02 PM (IST)

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு டாஸ்மாக் கடைக்குள் 5 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு நுழைந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு டாஸ்மாக் டாஸ்மாக் கடையில் சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு நுழைந்தது. மது வாங்க வந்த குடிமகன்கள் பலர் இதனால் ஓட்டம் பிடித்தனர்.  பாம்பு புகுந்தது குறித்து அங்கு பணிபுரியும்  முருகன் என்பவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வனத்துறையினர் உடனடியாக  கடையநல்லூர் பொதிகை இயற்கை அமைப்பின் நிர்வாகி கடையநல்லூர் சேக்உசேனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த சேக் உசேன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அவர் வருவதற்குள் குடிமகன்களை அச்சுறுத்திய 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மதுப்பெட்டிகளுக்குள் சென்று பதுங்கி கொண்டது. ஆனாலும் சேக்உசேன்  அந்த நல்லபாம்பினை தீவிரமாக தேடினார். அரைமணி நேரத்திற்கு பிறகு அந்த நல்ல பாம்பு மது பெட்டிகளுக்கு இடையில் பதுங்கி இருப்பதை பார்த்து விட்டார்.

அதன்பின்பு விரைந்து சென்று  நாகப் பாம்பை  சேக் உசேன் கையில்  கம்பு இல்லாமல் பிடித்து சாக்கு பையில் போட்டார். இதன்பின் நல்லபாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது . நல்ல பாம்பை லாவகமாக பிடித்த இளைஞர் சேப் உசேனை டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory