» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாலிடெக்னிக் கல்லூரியில் கோவிட்-19 சிகிச்சை மையம்

திங்கள் 6, ஜூலை 2020 7:45:40 PM (IST)


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வெளியிடங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பரிசோதனை செய்தவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்படுகின்றனர். பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி என தெரிந்தால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தால் அவர்கள் தங்களின் வீடுகளுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவிட்-19 கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200 படுக்கை வசதிகள் உள்ளன. தேவையான மருந்து, மாத்திரைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன. மேலும் மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.இம்மையத்தை சுகாதாரப்பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் முருகவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் தினேஷ் முத்துக்குமார், சங்கரி மற்றும் மருத்துவக்குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் சிவகிரி தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் சரவணன், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வருவாய் ஆய்வாளர் சிவன்பாண்டியன் ஆகியோரும் கோவிட்-19 மையத்தை பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு உத்தரவிட்டனர். கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதாக கல்லூரி தாளாளர் முருகேசன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory