» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பஞ்சாயத்துராஜ் அமைப்பை வலுப்படுத்த தீர்மானம்
செவ்வாய் 7, ஜூலை 2020 10:19:13 AM (IST)
காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அமைப்பை வலுப்படுத்த சுரண்டையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் அமைப்பான ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தென்மண்டல கலந்தாய்வு கூட்டம் சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முருகையா முன்னிலை வகித்தார். தென் மண்டல ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் கொடிக்குறிச்சி முத்தையா ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நோக்கம் அதன் திட்டங்கள், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி மற்றும் ராகுல்காந்தியை பிரதமராக்குவதில் செயல்பாடுகள், அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சமுதாய பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் கிராம புற மக்களுக்கு பணிகள் சென்றடைய பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை செயல்படுத்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது கிராம ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அன்னை சோனியா காந்தி ஆலோசனையின் பல கோடி வறியவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு. நன்றி தெரிவித்தும், 100 வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பிற்க்கு அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தொகுதி ஓருங்கினைப்பாளர்கள் தென்காசி மேகநாதன், சங்கரன்கோவில் தங்கராஜ், ஆலங்குளம் மகேஷ்குமார், வாசுதேவநல்லூர் வேல்ராஜ், கடையநல்லூர் ரத்தினம், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கீழப்பாவூர் செல்லப்பா, தென்காசி உதயகிருஷ்ணன், செங்கோட்டை சாகுல் ஹமீது, கடையநல்லூர் ஜெகநாதன், வாசு குருசாமி, மேலநீலிதநல்லூர் சுப்பிரமணியன், குருவிகுளம் காசிராஜன், கடையம் சௌந்தரபாண்டியன், ஆலங்குளம் முப்பிடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா
சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)

கனமழையால் பயிர் சேத பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 3:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்
சனி 23, ஜனவரி 2021 3:41:42 PM (IST)

செங்கோட்டை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 10:11:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 23, ஜனவரி 2021 8:56:20 AM (IST)

விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வெள்ளி 22, ஜனவரி 2021 9:14:57 AM (IST)
