» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொது மக்களுக்கு நெல்லை மாநகராட்சி வேண்டுகோள்

செவ்வாய் 7, ஜூலை 2020 11:51:11 AM (IST)

திருநெல்வேலி மாநகரில் திங்கள்கிழமை ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றை, சில வணிக நிறுவனங்களும், மக்களில் பலரும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை என தெரிய வந்துள்ளது. இதில் கடந்த 2 நாளில் மட்டும் 180 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே, இந்நோய் பரவலை தடுக்கும் வகையில் அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். சமூக இடைவெளியைப் பின்பற்றி மக்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory