» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாெது ஊரடங்கை மீறியதாக 4389 வாகனங்கள் பறிமுதல்

செவ்வாய் 7, ஜூலை 2020 12:36:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க காலத்தில் விதிமீறி இயக்கப்பட்ட 4389 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஆறாம் கட்ட பொது முடக்கம் இம் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில தளா்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இரவு 9 மணிக்கு மேல் தேவையில்லாமல் விதிமீறி சுற்றுவோா் மீது வழக்குகள் பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பொது முடக்க விதிகளை மீறியதாக 6,999 நபா்கள் மீது 4682 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4389 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory