» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எடை அளவைகள் முத்திரை முகாம் நடைபெறுகிறது

செவ்வாய் 7, ஜூலை 2020 5:42:47 PM (IST)

சுரண்டையில் நாளை முதல் எடை அளவைகள் முத்திரை முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார வியாபாரிகள் நலன் கருதி சுரண்டையில் எடை அளவைகள் முத்திரை முகாம் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இவ்வருட முத்திரை முகாம் நாளை (8 ம்தேதி) புதன் கிழமை துவங்கி வரும் 14-08-2020 வெள்ளிக்கிழமை வரை சுரண்டை ஆலடிப்பட்டி வாடியூர் ரோட்டில், காமராஜர் ஷட்டில் விளையாட்டு அரங்கம் கீழ்புறம்,  உள்ள எஸ்பிஎன் வளாகத்தில் தென்காசி எடை அளவைகள் முத்திரை ஆய்வாளர் சரவண முருகன் தலைமையில் நடக்கிறது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

அரசு வழிகாட்டுதல் படி தினமும் 30 எடை அளவைகளுக்கு முத்திரை பதிக்கப்படும். இம் முகாமில் ஏ மற்றும் பி காலாண்டு ( ஜனவரி முதல்  ஜூன் வரை முத்திரை பதிக்க வேண்டிய ) அனைத்து எடை அளவைகளுக்கும் முத்திரை பதித்து பயன்பெறுமாறும் முககவசம், அணிந்தும் சானிடைசர் உபயோகப்படுத்தியும், சமுக விலகலை கடைபிடிக்கவும் கொரோனா தடுப்பு விதிகளை செயல்படுத்தி கலந்து கொள்ள வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் நடராஜன், பொருளாளர் தனபால் மற்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory