» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆம்புலன்ஸ் - ஜீப் மோதிய விபத்து: பெண் காயம்

புதன் 8, ஜூலை 2020 10:25:52 AM (IST)

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே, மூதாட்டியின் உடலை கொண்டு சென்ற தனியாா் ஆம்புலன்ஸும், ஜீப்பும் மோதிக்கொண்டதில் பெண் காயமடைந்தாா்.

சேரன்மகாதேவி அருகே உள்ள கிளாக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (73). உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.இதையடுத்து உயிரிழந்த ராஜலட்சுமியின் உடலை, அவரது குடும்பத்தினர் தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊருக்கு கொண்டு சென்றனா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்தபோது, எதிரே வந்த ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடல் வெளியே விழுந்தது. காயமடைந்த ஆனந்தி என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.பின்னா் வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, உயிரிழந்த மூதாட்டியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory