» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் பரிதாப பலி
புதன் 8, ஜூலை 2020 11:49:06 AM (IST)
ஆலங்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை மாவட்டம் மாறாந்தை உடையாம்புளி ரோடு பகுதியை சேர்ந்தவர் யோசேப்பு மகன் பால்தினகரன் (38). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மதியம் ஆலங்குளத்திலிருந்து பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கரும்புளியூத்து பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பைக் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பால் தினகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பால்தினகரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா
சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)

கனமழையால் பயிர் சேத பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 3:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்
சனி 23, ஜனவரி 2021 3:41:42 PM (IST)

செங்கோட்டை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 10:11:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 23, ஜனவரி 2021 8:56:20 AM (IST)

விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வெள்ளி 22, ஜனவரி 2021 9:14:57 AM (IST)
