» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்ப தகராறில் விஷம் குடித்த பெண் பரிதாப பலி

புதன் 8, ஜூலை 2020 1:31:11 PM (IST)

பாவூர்சத்திரம் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த மளிகைக் கடைக்காரர் மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் கோபாலசமுத்திரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அன்புச்செல்வி (50). செல்வராஜ் மகன்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனராம். இதனை தாய் அன்புச்செல்வி கண்டித்துள்ளார். இதனால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் வெறுப்படைந்த அன்புசெல்வி விஷத்தை குடித்து விட்டாராம். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அன்புச்செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory