» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரேஷனில் ரூ.60க்கு 5 முககவசங்கள் விற்பனை : தென்காசி ஆட்சியர் தகவல்

புதன் 8, ஜூலை 2020 5:31:18 PM (IST)

ரேஷன் கடைகளில் ரூ.60க்கு 5 முககவசங்கள் விற்பனை செய்யபட்டு வருகின்றன என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்காசி மாவட்டத்தில் கொரொனா நொய் தொற்று தடுப்பு நடவடிக்கை பலதுறைகள் மூலம் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத் துறையும், மகளிர் திட்ட முகமையும் இணைந்து சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஆலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தி வரும் கூட்டுறவு மருந்து கடைகள், தென்காசி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தென்காசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தி வரும் நியாயவிலைக் கடைகள் மூலமும் மறுபடியும் 5 முக கவசங்கள்அடங்கிய தொகுப்பு ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேற்படி இரண்டு அடுக்கு முகக் கவசங்கள் மகளிர் திட்ட முகமை திருநெல்வேலி அலுவலகத்தின் கீழ் உள்ள சுய உதவிக்குழுக்கள் மூலமாக உயர் தரத்தில் சிறந்த முறையில் தயார் செய்யப்பட்டு, கூட்டுறவு துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொது மக்களுக்கு தேவையான சானிடைசர்களும் கூட்டுறவு மருந்து கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பொது மக்கள் வாங்கி பயனடைய தென்காசி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory