» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் சிக்கியது

புதன் 8, ஜூலை 2020 7:17:18 PM (IST)

கடையம் அருகே மேலும் ஒரு கரடி கூண்டில் பிடிபட்டது. கூண்டில் சிக்கிய கரடியை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரக பகுதிகளான பெத்தான் பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், கோட்டை விளைப்பட்டி, முதலியார்பட்டி, அழகப்பபுரம், பங்களா குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக கரடிகள் உணவுக்காக ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் சுற்றித்திரிந்த 9 கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.

இதையடுத்து துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் ஆம்பூர் கால்நடை மருத்துவர் சிவமுத்து, ஆய்வாளர் அர்னால்டு, உயிரியலாளர் ஸ்ரீதரன், கடையம் வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம், வனவர் முருகசாமி, காரையார் பிரிவு வனவர் ஜெகன், வனக்காப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கூண்டில் சிக்கிய கரடியை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த பகுதியில் சிக்கிய 10-வது கரடி இதுவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory