» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீ.கே.புதூர் இளைஞர் இறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதன் 8, ஜூலை 2020 7:59:37 PM (IST)

வீ.கே.புதூரில் இறந்த இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு சிவகிரியில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரைச் சேர்ந்தவர் குமரேசன், ஆட்டோ ஓட்டுனர். இவர் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் அவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். குமரேசன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் மற்றும் குமரேசன் மரணத்திற்கு நீதி கேட்டு சிவகிரியில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார்.சிஐடியு போக்குவரத்து மத்திய சங்க துணை செயலாளர் அமல்ராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆட்டோ சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன், கார்த்திக், தங்கம், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory