» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 27, மொத்தம் 557, டிஸ்சார்ஜ் 369, சிகிச்சையில் 182
புதன் 8, ஜூலை 2020 8:34:46 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் இன்று 27 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால் பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குணமடைந்தோர் 369 பேர்கள் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.
182 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 612 பேர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 3172 பேர்கள், சென்னை நீங்கலாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 2976 பேர்கள், சென்னையில் இருந்து வந்த 3674 பேர்கள் ஆக மொத்தம் 10,434 பேர்கள் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 9691 பேர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையங்களில் 743 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் இதுவரை 22,757 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 809 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 27 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர்கள் தென்காசி மாவட்டத்திலேயே இருப்பவர்கள் . இருவர் வெளிமாநிலத் திலிருந்தும், இருவர் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்தவர்கள். 63 பேர்கள் கொரோனா அறிகுறியுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். 6 பேர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 557ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 45 பேர்கள் குணமாகி உள்ளனர். 182 பேர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளை வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிற பகுதிகளில் இருந்தும் இப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா
சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)

கனமழையால் பயிர் சேத பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 3:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் மீன் விரலிகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்
சனி 23, ஜனவரி 2021 3:41:42 PM (IST)

செங்கோட்டை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
சனி 23, ஜனவரி 2021 10:11:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 23, ஜனவரி 2021 8:56:20 AM (IST)

விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வெள்ளி 22, ஜனவரி 2021 9:14:57 AM (IST)