» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு

வெள்ளி 10, ஜூலை 2020 5:04:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன் வீரவணக்கம் செலுத்துவதை முன்னிட்டு நாளை (11ம் தேதி) அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்து கோன் வீரவணக்கம் செலுத்துவதை முன்னிட்டு 11.07.2020 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி (2) இன் படி அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்னை, மதுபானத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து

Single parentJul 12, 2020 - 05:46:44 PM | Posted IP 162.1*****

கடை திறக்கவே வேண்டாம் sir

samyJul 11, 2020 - 03:03:57 PM | Posted IP 173.2*****

34 kataikal mattum

தமிழன்Jul 11, 2020 - 01:19:35 PM | Posted IP 162.1*****

நாசரேத் பகுதியில் கடை திறந்து உள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory