» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து

வெள்ளி 10, ஜூலை 2020 8:12:01 PM (IST)

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான காரையாறில் அமைந்துள்ளது அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோவில்.இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகளுடன் நடத்தப்பட்டு வெகுவிமரிசையாக நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவில் விழாவிற்கு வருகை தருவார்கள்.

இந்த கோவிலில் ஆகம விதிப்படி கொடியேற்றம் நடைபெற்று ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெற இருந்த நிலையில், கரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் கோவிலில் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory