» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவிப்பு

சனி 11, ஜூலை 2020 11:11:04 AM (IST)வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி கட்டாலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

சுதந்திர போராட்ட வீரரான வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 11, 2020 - 11:22:21 AM | Posted IP 173.2*****

இந்த லட்சணத்தில் இவனுக சமூக இடைவெளியை பற்றி மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory