» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா தடுப்பு நடவடிக்கை‌யாக கடைகள் அடைப்பு

சனி 11, ஜூலை 2020 12:25:48 PM (IST)கொரோனா தடுப்பு நடவடிக்கை‌ சுரண்டையில் 3 நாள் கடையடைப்பு துவங்கியது. காய்கறி‌ உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது ‌ இதனால் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய நகரங்களில் வியாபாரிகள் தாமாகவே முன்வந்து முழு கடையடைப்பு நடத்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைக்கின்றனர்.அதே போல் பொதுமக்கள் அதிகமாக நடமாடுவதை தவிர்க்க தென்காசி மாவட்டம் சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இன்று தொடங்கி வரும் திங்கட்கிழமை வரை 3 நாட்கள் தொடர் முழு கடையடைப்பு நடந்த தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்று காலை முதலே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இறைச்சி, மீன், சிக்கன் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டன.‌பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் இயங்கின. கார், ஆட்டோ, டூரிஸ்ட் வாகனங்கள் இயங்கவில்லை. முழு கடையடைப்பை முன்னிட்டு சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory