» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா தொற்று எதிரொலி : 2 காவல் நிலையங்கள் மூடல்

சனி 11, ஜூலை 2020 1:34:43 PM (IST)சுரண்டை அருகே உள்ள இரண்டு காவல் நிலையங்களில் காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையங்கள் மூடப்பட்டன.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் மற்றும் சாம்பவர்வடகரை காவல் நிலையங்களில் பணியாற்றும் தலா ஒரு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .இதனையடுத்து இன்று காலை இரண்டு காவல் நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காவல் நிலையம் தற்காலிகமாக மாற்று இடத்தில் இயங்கி வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory