» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனாவால் இறந்த பெண் உடல் முறையாக அடக்கம்

ஞாயிறு 12, ஜூலை 2020 10:34:42 AM (IST)

தென்காசியில் கொரோனா நோயால் மரணமடைந்த மூதாட்டி உடல் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் சார்ந்த மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் மூலமாகவும், பள்ளிவாசல் நிர்வாகம் மூலமாகவும், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பசி இல்லா தமிழகம் அறக்கட்டளையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று நல்லடக்கத்திற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டனர்.

தென்காசி நகராட்சியைச் கைலாச சுந்தரம் அவர்களுக்கு தேவையான முதலுதவி பொருட்கள் கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் கொடுத்து அதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூறி அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல்  தொலைபேசியில் அறக்கட்டளையினரை தொடர்பு கொண்டு பாதுகாப்பு பற்றி விளக்கி கூறினார்.

தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் இஸ்மாயில் ஆலோசனையுடன் ஜேசிபி இயந்திரம்  மூலம் 12 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. பசியில்லா தமிழகம் அறக்கட்டளையுடன் தென்காசி பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து அரசு அறிவித்த வழிமுறைகளின் படி நள்ளிரவில் மூதாட்டி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory