» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் முழு ஊரடங்கு : கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது

ஞாயிறு 12, ஜூலை 2020 11:01:31 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முழு  ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்திட ஜூலை 05, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிமை எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 2வது ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் பிரதானச் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காய்கனி சந்தைகள், கடைகள், உணவகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. திருநெல்வேலி,-மதுரை திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வித வாகனங்களும் இயக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினா். ஆங்காங்கே வெளியே சுற்றியவர்களை போலீசார் விசாரித்து அனுப்பினர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory