» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுகாதார அலுவலர்களிடம் சரியான தகவல்கள் கூற வேண்டும் : நெல்லை ஆட்சியர் வேண்டுகோள்

ஞாயிறு 12, ஜூலை 2020 11:50:38 AM (IST)

வீடுகளில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் சுகாதார அலுவலர்களிடம் சரியான தகவலை மக்கள் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனோ வைரசைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இதுவரை மாவட்டம் முழுவதும் 1800 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் நடைபெற்றுவரும் கரோனோ தடுப்பு நடவடிக்கைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனோ விழிப்புணர்வு குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் வழுக்கு பாலம் அருகில் மாற்றப்பட்ட மீன் மார்க்கெட்டிற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மக்களிடம் பேசிய அவர், கரோனோ வைரசைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

கூட்ட நெரிசல் காணப்படும் இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளில் கணக்கெடுப்பு பணிக்குவரும் சுகாதார அலுவலர்களிடம் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் சரியான தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory