» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா பாதிப்பிலிருந்து காக்க யாகங்கள் நடத்த வேண்டும் : பிரதமருக்கு பீடாதிபதி கடிதம்

ஞாயிறு 12, ஜூலை 2020 12:04:45 PM (IST)

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்க தோஷ பரிகார யாகங்களும், தெய்வப் ப்ரீத்தியும் செய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமருக்கும்,  தமிழக முதல்வருக்கும் ஸ்ரீ சூர்ய மங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தின் பீடாதிபதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஸ்ரீ சூர்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தின் பீடாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2019 நவ. 5ஆம் தேதி தனுசு ராசியில் வியாழனும் சனியும் ஒன்று சேர்ந்தது. வியாழனும் சனியும் ஒன்று சேர்ந்து தனுசு ராசியிலோ, மீன ராசியிலோ வந்தால் அது தெய்வக் கோபத்தை வெளிப்படுத்தும். 2019 நவம்பரில் தான் உலகில் முதன்முதலாக சீனாவில் கரோனா தொற்று உருவானது. நான்கு அல்லது அதற்கு அதிகமான கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்று சேர்ந்தால் அது ப்ரவர்ஜியா யோகம் எனப்படும். அதில் சனி, வியாழன் கூட இருந்தால் மஹா ப்ரவர்ஜியா யோகம் எனப்படும். மஹா ப்ரவர்ஜியா யோகத்தில் சூரிய கிரகணம் சேர்ந்து வந்தால் அது உலகத்தில் பேரழிவுகளை உருவாக்கும்.

2019 நவம்பர் 5ஆம் தேதி மஹா ப்ரவர்ஜியா யோகத்தோடு சேர்ந்து உருவாகிய சனி குரு கிரக யோகத்தில் 2019 டிசம்பர் 26, 2020 ஜூன் 21 ஆகிய இரண்டு நாள்கள் சூரிய கிரகணங்கள் உருவாகியது உலகில் நடக்கக் கூடிய தோஷ பலன்களை எடுத்துக் கூறுகிறது. இப்போது மகர ராசியில் இருக்கும் குரு, சனி கிரக யோகம் 2021 ஏப்ரல் 6 வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ளதைப் போல் இந்தியாவிலும் கரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்புண்டு. மேலும் அயல் நாடுகள், தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களாலும் பேரழிவுகள் உண்டாகும்.இந்த பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற தோஷ பரிகார யாகங்களும், தெய்வப் ப்ரீத்தியும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory