» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா

ஞாயிறு 12, ஜூலை 2020 7:39:43 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று 22 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று 22 பேர்களுக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேலகரம் எழில் நகரைச் சேர்ந்த 36 வயது பெண், கீழப்புலியூர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 37 வயது ஆண், சங்கரன்கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்த 38 வயது பெண், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த 38 வயது ஆண், சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த 22 வயது பெண், சங்கரன்கோவில் கோமதியாபுரம் 1வது தெருவைச் சேர்ந்த 23 வயது பெண், 70 வயது ஆண்,  55 வயது ஆண், கோமதியாபுரம் 2வது தெருவைச் சேர்ந்த 20 வயது ஆண், ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுரண்டை சிவன்கோவில் தெருவைச்சேர்ந்த 30 வயது பெண், இடைகால் யாதவர் தெருவைச் சேர்ந்த 20 வயது ஆண், முதலியார் குடியிருப்பைச் சேர்ந்த 43 வயது பெண்,  இலஞ்சி ராமசாமி பிள்ளை 2வது தெருவைச் சேர்ந்த 45 வயது பெண், தென்காசி அணைக்கரைத் தெருவைச் சேர்ந்த 60 வயது ஆண், மத்தாளம்பாறை ஐடி நிறுவன காவலாளியான 33 வயது ஆண், சுரண்டை ஆலடிப்பட்டியைச் சேர்ந்த 68 வயது ஆண், நல்லூர் ஆலடிப்பட்டிஆலடி அருணா தெருவைச் சேர்ந்த 93 வயது ஆண் ஆகிய 22 பேர்கள் கொரோனா மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டன. அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியிடங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory