» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டை பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா : பொதுமக்கள் அச்சம்

திங்கள் 13, ஜூலை 2020 10:19:53 AM (IST)

சுரண்டை பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் என பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்று பகுதியில் உள்ள கிராமங்களான வீகேபுதூர், கழூநீர்குளம், சேர்ந்தமரம், இரட்டைகுளம்,  ஆனைகுளம், இடையர்தவணை, வெள்ளகால், அதிசயபுரம், ராஜகோபாலபேரி, பொய்கை, சாம்பவர்வடகரை,  சுந்தரபாண்டியபுரம்,  உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதை கடந்தது.இரண்டு பெண் காவலருக்கு ஏற்பட்ட தொற்றால் சாம்பவர்வடகரை மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலையம் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊரடங்கு காலத்தில் தனது சொந்த பணத்தில்  பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் பொது மக்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் பழனி நாடார் வழங்கினார். 

மேலும் ஆர்ப்பாட்டம், காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதால் தானாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டதால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து சுரண்டை திரும்பிய பழனி நாடார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே தொற்று அதிகமாக பரவியுள்ள நிலையில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் தொற்றுக்கு ஆளானதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory