» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவிட்-19 சிறப்பு மருத்துவ முகாமில் 44 பேர் டிஸ்சார்ஜ்

திங்கள் 13, ஜூலை 2020 11:21:36 AM (IST)வாசுதேவநல்லூர் கோவிட்-19 சிறப்பு மருத்துவ  முகாமில் ஒரே நாளில் 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்ட கோவிட்-19 சிறப்பு மருத்துவ  முகாமில் கொரான தொற்று கண்டறிய பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.இந்த கல்லூரியில் 94 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு முகாம் பொறுப்பு அதிகாரி டாக்டர் முத்துகுமார் தலைமையிலான மருத்துவர்கள் ரஞ்சித் வினோத், சங்கரி, சுபாஷினி ஆகியோர் மருத்துவ பணி ஆற்றி வருகின்றனர். 

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொரானா பரிசோனை  முடிவில் நெகட்டிவ் என்று வந்த 44 பேர் நேற்று வீட்டிற்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களை பொறுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் முத்துக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory