» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா பரிசோதனை செய்தவர் திடீர் உயிரிழப்பு

திங்கள் 13, ஜூலை 2020 12:25:26 PM (IST)

சுரண்டை அருகே கரோனா பரிசோதனை செய்தவர் முடிவு வரும் முன்பே திடீரென இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டை அருகே உள்ள கள்ளம்புளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 59 வயது நபர்  இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், மற்றும் இளைப்பினால் சிரமப்பட்டு வந்துள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவதுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.அதன் படி கடந்த 10 ம் தேதி சுகாதார மேற்ப்பார்வையாளர் புன்னைவனம், சுகாதார ஆய்வாளர் ஜாண், வருவாய் ஆய்வாளர் வீர லட்சுமி மற்றும் அதிகாரிகள் அவரை கொரோனா பரிசோதனைக்காக கடையநல்லூர் அனுப்பி வைத்து பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான முடிவு வரவில்லை. 

இதற்க்கிடையே அவருக்கு நேற்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சில் தென்காசி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சேர்த்த சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார துறையினர் அவரது உடலை கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் படி அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதன் படி அதிகாரிகள் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

இதனால் அடக்கத்தில் அவரது உறவினர்கள் வெகு சிலரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. கள்ளம்புளி கிராமம் முழுவதும் அடைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அடக்கம் செய்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory