» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகிரியில் சிஐடியு வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திங்கள் 13, ஜூலை 2020 1:07:49 PM (IST)



தென்காசி மாவட்டம் சிவகிரியில் சிஐடியு வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கட்டுமான தொழிலாளர் கொரோனா நிவாரண நிதி சம்பந்தமாக மனு கொடுக்க சென்ற  சிஐடியு  மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை தடுத்து அவதூறாக பேசிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகிரியில் இந்திய தொழிற்சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை சிஐடியு போக்குவரத்து சங்க துணைத்தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமசுப்பு, ரவி, மாரியப்பன்,சுப்பிரமணியன், கிருஷ்ணன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், சிவகிரி ஆட்டோ சங்க தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory