» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாஞ்சிநாதன் விழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை : தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 15, ஜூலை 2020 6:58:52 PM (IST)

செங்கோட்டையில் வரும் 17ம் தேதி வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், ஆட்சியர் மட்டுமே மாலை அணிவிப்பர். பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தென்காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் வாஞ்சிநாதன்; பிறந்த நாளை 17.07.2020 அன்று அரசு விழாவாக கொண்டாடிட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து , ஆண்டு தோறும் ஜுலை 17அன்று அன்னாரது திருவுருவசிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அன்றையதினம் பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளும் வருகை தந்து மாலை அணிவித்து மரியாதைசெலுத்திட அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் செங்கோட்டையில் அமைந்துள்ள சுதந்திரபோராட்ட வீரர் வாஞ்சிநாதன்; மணிமண்டபத்தில் அவரது திருவுருவசிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  மட்டும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர்; உத்தரவிட்டுள்ளார்;.

பொதுமக்கள் அதிகமாக கூடாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசால் தெரிவிக்க ப்பட்டுள்ளது. எனவே சுதந்திரபோராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்திற்கு தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும்,வெளிமாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பதையும் இதற்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்கு மாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory