» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயில்நிலையத்தில் நவீன மின்னணு சிக்னல் அமைப்பு துவக்கம்

புதன் 15, ஜூலை 2020 8:03:40 PM (IST)


திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், தட்டப்பாறை ஆகிய ரயில்  நிலையங்களில் நவீன மின்னணு சிக்னல் அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் - கடம்பூர் வாஞ்சி மணியாச்சி - தட்டப்பாறை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பணி நிறைவு பெற்ற இரட்டை அகல ரயில் பாதை பிரிவுகளில் மார்ச் 10 முதல் 12 வரை தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். கரோனா தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று இந்த புதிய இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தொழிலாளர் பற்றாக்குறை இருந்தபோதும் தற்போது அந்த புதிய இரட்டை ரயில் பாதை அமைப்புபணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று (15 ம் தேதி) கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், தட்டப்பாறை ஆகிய ரயில்  நிலையங்களில் நவீன மின்னணு சமிக்ஞை (சிக்னல்) அமைப்பினை தெற்கு ரயில்வே முதன்மை சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். அப்போது ரயில் விகாஷ் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை திட்ட அதிகாரி (பணி). கமலாகர் ரெட்டி, மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகானி, கோட்ட சமிக்ஞை பொறியாளர் கங்குல சுமன் ஆகியோர் உடன் இருந்தனர். இன்று  இரவுக்குள் கங்கைகொண்டான் - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மின் ரயில் என்ஜின் சோதனை ஓட்டமும் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory