» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாத்தான்குளம் அருகே இறந்த சிறுமி உடலை வாங்க மறுப்பு : உறவினர்கள் போராட்டம்

வியாழன் 16, ஜூலை 2020 5:52:20 PM (IST)

சாத்தான்குளம் அருகே இறந்த 8 வயது சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்வலை கிராமத்திலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று 7 வயது மதிக்கதக்க ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து சேர்ந்தனர்.  போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இறந்த சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நிவாரணம் வழங்க வலியுறுத்தி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory