» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய அதிகாரி கைது

வியாழன் 16, ஜூலை 2020 6:08:09 PM (IST)

புளியங்குடியில்  விதைப்பண்ணை உரிமையாளரிடம் ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் விதைப்பண்ணை அமைப்பதற்காக கூடுதல் மின்சார ( டிரான்ஸ்பாம்) வசதி கேட்டு மனு செய்திருந்த செல்வின் ராஜகுமார் என்பவரிடம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து செல்வின் ராஜகுமார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசிற்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆலோசனையின் பேரில்  ரூ.20  ஆயிரம் பணத்தை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி யிடம் செல்வின் ராஜகுமார் இன்று  வழங்கினார். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  உதவி செயற் பொறியாளர் கருப்பசாமியை கைது செய்து அவரிடம் இருந்த  ரூ.20  ஆயிரம் பணத்தை   பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory