» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செய்துங்கநல்லூர் அருகே தாய், மகள் விஷம் குடித்த சம்பவம் : நெல்லையில் சாலை மறியல்

திங்கள் 20, ஜூலை 2020 5:42:24 PM (IST)


செய்துங்கநல்லூர் அருகே தாய், மகள் விஷம் குடித்த சம்பவத்தில் காவல் துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி சங்கரம்மாள் (37). ஆடுகள் மேய்ச்சல் தொழில் செய்து வந்தார். . கடந்த சில நாள்களுக்கு முன்பு சங்கரம்மாளின் ஆடுகளை நாய்கள் கடித்தது தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் சங்கரம்மாளிடம் செய்துங்கநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சங்கரம்மாள், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் விஷம் குடித்து மயங்கினாராம். அவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருபெண்கள் விஷம் குடிக்க காரணமானவர்கள் மீதும், விசாரணை நடத்தியதில் பாரபட்சம் காட்டிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சங்கரம்மாளின் உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வி.எம்.சத்திரம்-பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory